ஓய்வு பெற்ற சில மாதத்திலேயே பயிற்சியாளரான ரஞ்சி நாயகன். அதும் இந்த அணிக்காக – அருமையான முடிவு

jaffer6

இந்திய டெஸ்ட் அணியில்மட்டும் இடம் கிடைத்து சிறப்பாக சில ஆண்டுகள் ஆடிய வாசிம் ஜாபர் அதன்பிறகு இடம் கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளிலேயே தன் காலத்தைக் கழித்தவர். அவர் ஆடிய காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், விரேந்தர் சேவாக் போன்ற மாபெரும் ஜாம்பவான்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கை கவனித்து வந்தனர்.

Jaffer 1

இதனால் அவருக்கு இணையாக திறமையுள்ள வாசிம் ஜாபர் இந்திய அணியில் பெரிதாக இடம்பிடித்து ஜொலிக்க முடியவில்லை. இவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் தற்போது 42 வயதாகிறது. கடந்த 24 ஆண்டுகளாக முதல்தர போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ளார். மொத்தம் அதிகம் 260 போட்டிகளில் ஆடியுள்ளார் அதில் 19422 ரன் எடுத்துள்ளார்.

இதில் 57 சதங்களும் அடங்கும். கடந்த மாதம் 7ஆம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மும்பை அணிக்காக முன்னதாக ஆடிய கடந்த சில ஆண்டுகளாக விதர்பா அணிக்காக ஆடி வந்தார். இவர் பேட்டிங் மூலம் விதர்பா அணி 2018 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை தொடரையும், 2019ஆம் ஆண்டு இரானி கோப்பை தொடரையும் வென்றது.

Jaffer

தற்போது அவர் ஓய்வு பெற்றதால் அவரையே அந்த விதர்பா அணிக்கு பயிற்சியாளராக முடிவு செய்துள்ளனர். வாஷிங் ஜாஃபர் அணியிலும் அணி வீரர்களிடமும் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது. இதன் காரணமாக அவருக்கு வந்த வாய்ப்பை தள்ளிவிட முடியாது. மேலும் அவரை விட சிறந்த ஒரு பயிற்சியாளரை நாங்கள் இனிமேலும் கண்டறிய முடியாது. இதன் காரணமாக அவரை பயிற்சியாளராக நியமித்தோம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்மூலம் ஓய்வுபெற்ற சில மாதத்திற்குள் அவர் விளையாடிய அதே அணிக்கு பயிற்சியாளராகி இருக்கிறார். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் ஏகப்பட்ட அனுபவம் கொண்ட வாசிம் ஜாபர் அந்த அணிக்கு பயிற்சியாளராக மாறி இருப்பது அந்த அணிக்கு பெரிய பலம் தான்.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவர் முறைப்படி பதவி ஏற்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.