பும்ராவுக்கு இந்த ஆசை மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தா நம்பர் 1 இடம் அம்பேல்தான் – வாசிம் அக்ரம் எச்சரிக்கை

Akram
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். உலக வேகப் பந்து வீச்சாளர்களில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்த வாசிம் அக்ரம் தற்போது பந்துவீச்சு பயிற்சியாளராக தனது கேரியரை தொடர்ந்து வருகிறார். இவரது வேகப்பந்து வீச்சிற்கு உலகெங்கும் பெருமளவு ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

akram

- Advertisement -

அந்த அளவிற்கு தனது இளமை காலத்தில் முன்னணி பேட்ஸ்மேன்களை அபாரமான ஸ்விங் பந்துவீச்சில் மூலம் மிரட்டி வந்தார். மேலும் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் பும்ரா தனது நம்பர் ஒன் இடத்தை தக்கவைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் தெரிவித்த கருத்தில் கூறியதாவது :

இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் மிக அதிகமாகிவிட்டது. பும்ரா போன்ற இந்திய இந்தியாவின் நம்பர் ஒன் மற்றும் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். ஏனென்றால் சர்வதேச தரத்தில் அதிக போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். இதனால் கவுன்டி கிரிக்கெட் நோக்கி நீங்கள் போகக்கூடாது.

Bumrah

முதல்தர கிரிக்கெட் மற்றும் கவுண்டி போட்டியில் தான் பந்துவீச்சாளர்களுக்கு முறையாக பந்துவீச அதிகம் கற்றுக்கொடுக்கும். இருந்தாலும் நீங்கள் அதிகமான போட்டிகளில் பங்கேற்கும் போது பணிச்சுமை அதிகமாகிவிடும். மேலும் அப்படி உள்ளூர் போட்டிகளிலும், கவுண்டி போட்டிகளிலும் விளையாடி விட்டு சர்வதேச போட்டிகளில் ஆடும் போது உங்களது சோபிக்க முடியாமல் கூட போகலாம்.

- Advertisement -

அதனால் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளுங்கள் உங்களது அணிக்காக விளையாடுங்கள். மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ரிலாக்ஸ் ஆக இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களது பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்படும். டி20 கிரிக்கெட் அற்புதமானது இந்த டி20 தொடரின் மூலம் அதிக பணம் கிடைக்கும். ஆனால் பந்து வீச்சை கற்றுக் கொள்ள முடியாது.

Bumrah-1

டி20 போட்டியை வைத்து ஒரு பந்து வீச்சாளர் இன் தரத்தை அறிய முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் வைத்துதான் அவரது பந்து வீச்சை திறனை அறிய முடியும் என்றும் வாசிம் அக்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது. எனவே பும்ராவுக்கு இனிவரும் காலங்களிலும் சரி, தற்போதும் சரி கவுண்டி போட்டியில் விளையாடும் எண்ணமே வரக் கூடாது. அப்படி இருந்தால் தொடர்ந்து அவர் நம்பர் 1 இடத்தில் நீடிப்பார் என்றும் வாசிம் அக்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement