
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக அத்தொடரில் சூப்பர் 4 போட்டியில் அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் பேட்டை வைத்து இந்தியாவை சுடுவது போல் கொண்டாடி கலாய்த்தார். அதே போல 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான கருத்தை ஹரிஷ் ரவூப் சைகையாக செய்து காட்டி கிண்டலடித்தார்.
இதற்கிடையே வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களை சந்தித்தனர். அப்போது ஒரு ரசிகர் “இந்தியாவை பழித் தீர்க்க வேண்டும் விட்டு விடாதீர்கள்” ஹரிஷ் ஃரவூப்பிடம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டார். அதே போல இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான், அப்ரிடி ஆகியோர் தெரிவித்தனர்.
கடைசியில் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய இந்தியா 3வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கு ஹரிஷ் ரவூப் 3.4 ஓவரில் 50 ரன்களை வாரி வழங்கியது முக்கிய காரணமானது. ஏற்கனவே 2022 டி20 உலகக் கோப்பையில் அவரை விராட் கோலி அடித்து நொறுக்கியதை மறக்க முடியாது.
அப்படிப்பட்ட ஹரிஷ் ரவூப் இந்தியாவுக்கு எதிரானப் போட்டிகளில் பந்து வீச்சில் வீச்சில் ரன் மெஷினாக செயல்படுவதாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் சாடியுள்ளார். உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவூப் விளையாடாத வரை சரியான லென்த், லென்த்தில் பந்து வீச முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அக்ரம் பேசியது பின்வருமாறு. “துரதிஷ்டவசமாக அவர் ரன் மெஷின் பவுலர்”
“குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக அவர் மோசமாக பந்து வீசுகிறார். அவரை நான் மட்டும் விமர்சிக்கவில்லை. மொத்த உலகமும் விமர்சிக்கும் அவர் உள்ளூரில் விளையாடுவதில்லை. அதனால் அவர் முன்னேறப் போவதில்லை. உள்ளூரில் விளையாடாத அவரைப் போன்ற வீரர் உங்களுடைய அணியில் தேவையில்லை. நீங்கள் குறைந்தது 4 – 5 உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: இந்திய டி20 அணியில் ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஒரு வாய்ப்பை தாருங்கள் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
“உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் அவரிடம் கட்டுப்பாடு இல்லை. ஒரு வீரர் உள்ளூரில் விளையாடாவிட்டால் அவருக்கு பாகிஸ்தான் வாரியம் நன்றி சொல்லி வெளியே அனுப்ப வேண்டும்” என்று கூறினார். இதற்கிடையே ஃபைனலில் அவரை கிளீன் போல்ட்டாக்கிய ஜஸ்ப்ரித் பும்ரா விமானம் மொத்தமாக விழுந்தது என்ற வகையில் சைகையால் கொண்டாடி பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.