தற்போதையை கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இந்த இந்திய வீரர்தான் – புகழ்ந்து தள்ளிய வாசிம் அகரம்

Akram
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான அணி 147 ரன்கள் குவிக்கவே இந்திய அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

அதனை சாதூர்யமாக துரத்திய இந்திய அணியானது ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் சுதாரித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா 17 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 33 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதேபோன்று பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாண்டியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினையும் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதே போல் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினால் நிச்சயம் உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டாக அவர் மாறுவார். தற்போது உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பாண்டியா தான் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதோடு அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக அவர் விளையாடி வருவதால் நிச்சயம் அவரே உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என தான் நினைப்பதாக வாசிம் அக்ரம் கூறினார். அதுமட்டுமின்றி நேற்றைய போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா கூட ஹார்டிக் பாண்டியாவின் ஆட்டத்தை புகழ்ந்து பேசி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : IND vs PAK : கோபமில்லையே, என்னுடன் பேசுவீங்களா – திறமையால் அசத்திய ஜடேஜாவிடம் தயவாக பேசிய முன்னாள் வீரர்

பாண்டியா இந்திய அணிக்கு திரும்பியதிலிருந்து மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியின் போது அவர் கம்பேக் கொடுக்கையில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதனை தொடர்ந்து இந்திய அணிக்கும் தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது திறமை பற்றி நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் என்றும் அவர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement