2021 டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும். சாம்பியனாக வாய்ப்புள்ள 4 அணிகள் – வாசிம் அக்ரம் கணிப்பு

Akram
- Advertisement -

ஆடவருக்கான 7வது டி20 உலக கோப்பை தொடரானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 15ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடருக்கு அணைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்த தொடரைக் குறித்து ஏற்கனவே பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களுது கருத்துகளை தெரிவித்து வரும் இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான வாசிம் அக்ரம், இந்த டி20 உலக கோப்பையை கைப்பற்ற நான்கு அணிகளுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதுப் பற்றி தன்னுடைய கருத்தை கூறிய அவர்,

- Advertisement -

கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் இந்திய அணியே இந்த உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எப்போதுமே பயமில்லாமல் விளையாடுகிறார்கள். அதுதான் அவர்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கூறிய அவர், இந்தியாவைத் தவிர்த்து நியூசிலந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

அந்த பேட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியைக் குறிப்பிட்டு பேசிய அவர், நாம் எப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பற்றி மறந்துவிடக் கூடாது. உலக கோப்பை சமயத்தில் அந்த அணியின் முக்கியமான வீரர்கள் அணிக்குள் இடம்பெற்றார்கள் என்றால், மற்ற அணிகளை பயமுறுத்தும் அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கும் என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை இரண்டு முறை டி20 உலக கோப்பையை கைப்பற்கியிருக்கிறது.

Cup

கடைசியாக நடந்த 2016ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையையும் அந்த அணிதான் கைப்பற்றி நடப்பு சாம்பியனாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டி20 உலக கோப்பை எந்த நாட்டில் நடைபெறும் என்பது குறித்த முடிவு, வருகிற ஜீன் 01ஆம் தேதி ஐசிசி நடத்தும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dubai

இதற்கு முன்னராக இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர், இங்கு அதிகரித்து வரும் கொரானாவை கருத்தில் கொண்டு ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்படும் என்ற தகவல்களும் வந்துள்ளன.

Advertisement