தோனி எப்போவும் தோனி தான், அதை பற்றி அவருக்கு நம்ம சொல்ல வேண்டியதில்லை – வாசிம் அக்ரம் பாராட்டு

Wasim Akram
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் கோலாகலமாக மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்து பின்னடைவுக்கு உள்ளான அந்த அணி இம்முறை ஆரம்பம் முதலே தோனி தலைமையில் சீரான வெற்றிகளை பற்றி நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் வலுவான குஜராத்தை அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது.

- Advertisement -

குறிப்பாக மோகித் சர்மாவின் போராட்டத்தையும் தாண்டி கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா செய்த அபார ஃபினிஷிங் சென்னைக்கு காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதனால் ஜடேஜாவை தம்முடைய இடுப்பில் தூக்கி வைத்து கேப்டன் தோனி கொண்டாடியது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று மகத்தான விக்கெட் கீப்பர் பேட்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்து 2020இல் ஓய்வு பெற்ற தோனி வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.

வாசிம் அக்ரம் பாராட்டு:
அத்துடன் விரைவில் 42 வயதை தொடும் அவர் இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியுடன் 8வது இடத்தில் ஓரிரு பந்துகளை மட்டும் சந்திக்கும் வகையில் களமிறங்கி பேட்டிங் செய்தார். அதனால் தற்போது கோப்பையை வென்றுள்ள அவர் அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொடர் முழுவதும் கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களில் எதிரணிகளை மிஞ்சி தமக்காக ஆதரவு கொடுத்த ஏராளமான ரசிகர்களுக்காக அடுத்த வருடம் விளையாட முயற்சிப்பேன் என்று தோனி தெரிவித்தார்.

MS Dhoni Jadeja

ஆனால் அது அடுத்த 8 – 10 மாதங்களில் தம்முடைய உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அமையும் என்று தெரிவித்த அவர் உறுதியான முடிவை சொல்லவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தாம் நினைத்திருந்தால் மேற்கொண்டு விளையாடியிருக்கலாம் என்ற சூழ்நிலை இருந்தாலும் சரியான சமயத்தில் ஓய்வு பெற்றதைப் போல் ஐபிஎல் தொடரில் விடைபெறும் நேரம் தோனிக்கு தெரியும் என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் எந்த அணியையும் சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெற வைக்கும் மகத்தான திறமை தோனியிடம் இருப்பதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை தாம் விரும்பியிருந்தால் தோனி இந்தியாவுக்கு தொடர்ந்து விளையாடியிருக்கலாம். ஏனெனில் கேரியரின் கடைசியிலும் அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவர் சரியான சமயத்தில் ஓய்வு பெற்றார். அந்த வகையில் தோனி எப்போதும் தோனி தான். உடலளவில் மிகவும் ஃபிட்டாக இருக்கும் அவரிடம் ஏகப்பட்ட அனுபவமும் பொறுமையும் இருக்கிறது. அதை விட இந்த விளையாட்டில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருப்பது முக்கியமாகும்”

“அந்த வகையில் நீங்கள் ஃபிட்டாக இருந்தாலும் இல்லை என்றாலும் ஆர்வத்துடன் விளையாடாமல் போனால் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியாது. அதனாலேயே இந்த ஐபிஎல் தொடரில் அவர் எந்த போட்டியிலும் உட்காராமல் விளையாடினார். பொதுவாக இந்த வயதில் கம்பேக் கொடுப்பது மிகவும் கடினமாகும். ஆனால் இப்போதும் நல்ல ஆர்வத்தை கொண்டுள்ள தோனி அதற்காக பயிற்சிகளை எடுத்து விளையாடுகிறார். அவர் மகத்தான கிரிக்கெட்டர். அற்புதமான கேப்டன். குறிப்பாக 5 கோப்பைகளை வெல்வது என்பது பெரிய சாதனையாகும்”

இதையும் படிங்க:WTC Final : நாட்டை விட ஐபிஎல் முக்கியம்னு இருந்த உங்களுக்கு எப்டி வெற்றி கிடைக்கும் – இந்தியாவை விளாசும் முன்னாள் பாக் வீரர்

“ஏனெனில் 10 அணிகள் போட்டி போடும் இந்த தொடரில் பிளே ஆப் செல்ல நீங்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அந்த வகையில் சென்னை ஆரம்பத்தில் மெதுவாக துவங்கியது. ஆனால் தோனி எந்த அணியும் சிறப்பாக செயல்பட வைத்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்று கோப்பையை வென்று கொடுப்பவர். அவரால் சென்னை 5 கோப்பைகளை வென்றுள்ளது கனவு நிஜமான சாதனையாகும். அந்த வகையில் ஜாம்பவான் அணியாக உருவெடுத்துள்ள சென்னை உலக அளவில் வலுவான அணியாக திகழ்கிறது. மேலும் தோனி ஓய்வு பெற்றாலும் சென்னை அணியுடன் பயிற்சியாளராக இருப்பாரே தவிர பிரிந்து செல்ல மாட்டார்” என்று கூறினார்.

Advertisement