- Advertisement -
இந்திய கிரிக்கெட்

1996 அப்ரிடி மாதிரி இங்கிலாந்தை நொறுக்கிய அபிஷேக்கிற்கு இந்த அட்வைஸ் கொடுத்தேன்.. வாசிம் அக்ரம் பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் வங்கதேசத்தையும் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. முன்னதாக துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமை இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா சந்தித்தார்.

அப்போது இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற டி20 போட்டியில் அதிரடியான சதத்தை அடித்த அவரை வாசிம் அக்ரம் பாராட்டினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி 37 பந்துகளில் சதமடித்தது போல் மும்பையில் இங்கிலாந்தை அபிஷேக் சர்மா அடித்து நொறுக்கியதாக வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

பாராட்டிய அக்ரம்:

மேலும் நல்ல திறமைக் கொண்ட அவரால் இன்னும் 15 – 20 வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடி சாதிக்க முடியும் என்று அக்ரம் தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பைப் பற்றி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் விவரித்தது பின்வருமாறு. “துபாயில் அபிஷேக்கை நான் சந்தித்தேன். முதலில் அவரை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அந்த இளம் பையன் என்னிடம் தாமாக வந்து நான் அபிஷேக் சர்மா என்று சொன்னார்”

“அப்போது தான் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய அபிஷேக் நீங்கள் தானா என்று அவரிடம் சொன்னேன். வெல்டன் மகனே என்றும் அவரிடம் சொன்னேன். அவருடைய பேட்டிங் பற்றிய சில வீடியோக்களை நான் பார்த்துள்ளேன். அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இது வெறும் ஆரம்பம் மட்டுமே நீங்கள் இன்னும் 15 – 20 வருடங்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று அவருக்கு ஒரு எளிய ஆலோசனையும் நான் கொடுத்தேன்”

- Advertisement -

அப்ரிடி போல:

“அந்தளவுக்கு நல்ல திறமையைக் கொண்டுள்ள அவர் சிறந்த ஃபீல்டர் என்றும் நம்புகிறேன். இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளையாடியது என்ன ஒரு அற்புதமான இன்னிங்ஸ். 37 பந்துகளில் அவர் சதம் அடித்தார். இதற்கு முன் சாகித் அப்ரிடி அப்படி சதத்தை அடித்துள்ளார். அதன் பின் அபிஷேக் அப்படி சதமடித்ததை கேள்விப்பட்டேன்”

இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டிக்கு முன் பயிற்சியை தவிர்த்த கேப்டன் ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

“மும்பையில் அவர் விளையாடிய ஆட்டத்தை பார்த்தேன். அவர் அதிரடியாக விளையாடக்கூடிய நல்ல பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். அவர் தற்போது தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -