ஜஸ்ப்ரித் பும்ரா மேல யாரும் அந்த சந்தேகப்பட வேணாம்.. அவரை யூஸ் பண்ற இந்தியாவை பாராட்டனும்.. வாசிம் அக்ரம்

Wasim Akram
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 2016ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். மிகவும் குறைந்த தூரம் ஓடி வந்து வித்யாசமான ஆக்சனை வைத்து பவுலிங் செய்த அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று கணிக்கப்பட்டது. ஆனால் 2018 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இன்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார்.

அந்தளவுக்கு 2018 முதல் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முழுமையாக 5 போட்டிகளில் விளையாடினார். அத்தொடரில் மற்ற பவுலர்கள் தடுமாறிய போது முழு மூச்சுடன் பவுலிங் செய்த பும்ரா 32 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார். அதனாலேயே கடைசிப் போட்டியில் காயமடைந்த அவர் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

- Advertisement -

பும்ரா மேல் சந்தேகம் வேணாம்:

அதனால் இங்கிலாந்தில் தம்மால் 3 போட்டிகளுக்கு மேல் விளையாட முடியாது என்று பும்ரா ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார். துரதிஷ்டவசமாக அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறவில்லை. அதனால் ஒன்று முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வு பெறுங்கள் என்று சொல்லாத குறையாக இந்தியாவை சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்தார்கள்.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் மிகச்சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமே வேண்டாமென பாகிஸ்தான் ஜாம்பவான் தெரிவித்துள்ளார். அவருடைய பணிச்சுமையை இந்தியா நிர்வகிக்கும் விதம் பாராட்டுக்குரியது என்றும் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்பதில் சந்தேகம் வேண்டாம். வழக்கத்துக்கு மாறான ஆக்சனை கொண்டுள்ள அவரிடம் வேகம் இருக்கிறது”

- Advertisement -

வாசிம் அக்ரம் கருத்து:

“அப்படிப்பட்ட அவரை இந்தியா நிர்வகிக்கும் விதம் சிறப்பானது. அவர்களுடைய நிர்வாகம் மற்றும் மனநிலை பாராட்டப்பட வேண்டும். வெவ்வேறு தலைமுறைகள் ஒப்பிடப்படக்கூடாது. பும்ரா வலது கை பவுலர், நான் இடது கை பவுலர். எங்களை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விவாதங்கள் இருப்பதை நான் பார்த்துள்ளேன். ஆனால் அதைப் பற்றி பும்ரா அல்லது நான் கவனித்ததில்லை”

இதையும் படிங்க: ஃபேர்வெல் கொடுக்காம விராட், ரோஹித்தை ரிட்டையராக்கிய பிசிசிஐ.. கடைசியா இதையாச்சும் செய்யனும்.. பிஸ்னோய் பேட்டி

“பும்ரா நவீன கிரிக்கெட்டில் சிறந்தவர். என்னுடைய காலத்தில் நானும் கொஞ்சம் அசத்தினேன். ஆனால் அவர் மிகவும் இம்ப்ரஸ் செய்கிறார். 90களில் டி20 இல்லை. ஒருநாள் போட்டிகளில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்காமல் விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட நல்ல பந்துகள் அடிக்கப்படுகின்றன. அப்படி பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட நினைப்பதால் பும்ரா விக்கெட்டுகளை எடுப்பதற்கான வாய்ப்பை அதிகமாக பெறுகிறார். பவுலர்களாக நாங்கள் அந்த ஆக்ரோசத்தை விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement