- Advertisement -
ஆசிய கோப்பை

ஃபைனலில் இதை செஞ்சா இந்தியாவை பின்னங்கால் வைக்க வெச்சு.. கோப்பையை தூக்கலாம்.. பாக்கிற்கு அக்ரம் அட்வைஸ்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் இந்தியா ஏற்கனவே இத்தொடரில் 2 முறை பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.

அத்துடன் கடைசியாக பாகிஸ்தானை சந்தித்த 7 போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா நம்பர் ஒன் அணி என்பதற்கு நிகராக செயல்பட்டு வருகின்றது. மறுபுறம் அதற்கெல்லாம் பதிலடியாக இந்தியாவை இப்போட்டியில் பழி தீர்க்க பாகிஸ்தான் அணி தயாராக உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்த:

ஆனால் பாகிஸ்தான் அணி பந்து வீட்டுத் துறையில் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் இந்தியாவை பின்னங்கால் வைக்க வைத்து கோப்பையை வெல்ல முடியும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக ஆரம்பத்திலேயே அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தால் பாகிஸ்தான் அணியால் வெல்ல முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு.

“இந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பந்து வீச்சு முன்னணியில் வரும் என்று நான் நம்புகிறேன். இது இந்தியா – பாகிஸ்தான் போட்டி. இந்தப் போட்டியில் இந்தியா வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டை நிறையப் பார்த்த நீங்களும் நாங்களும் இந்த ஃபார்மெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதைப் பார்த்துள்ளோம்”

- Advertisement -

வாசிம் அக்ரம் அட்வைஸ்:

“ஒரு நல்ல இன்னிங்ஸ், ஒரு சிறந்த ஸ்பெல் போட்டியின் தன்மையை மாற்றக்கூடியது. பாகிஸ்தான் அணி அந்த தன்னம்பிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். சூப்பர் 4 சுற்றில் பெற்ற அடுத்தடுத்த வெற்றிகளால் கிடைத்த வேகத்தை ஞாயிற்றுக்கிழமையும் எடுத்துச் சென்று விவேகமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: கேப்டன் சூரியகுமார் ஃபார்ம் அவுட்டானதா நினைக்காதீங்க.. ரோஹித் செஞ்சதையே செய்றாரு.. அஸ்வின் ஆதரவு

“ஆரம்பத்திலேயே நீங்கள் சில விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக அபிஷேக் – கில் ஆகியோருடைய விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை பின்னங்கால் வைக்க வையுங்கள். அந்தப் போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். இறுதியில் சிறந்த அணி கோப்பையை வெல்லும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -