அறிமுகம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் எனக்கு நிரந்தர வாய்ப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது. இந்த தொடர் எனக்கான சோதனை – இந்திய வீரர் வருத்தம்

sundar1
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

india

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : இந்த இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாடுவது ஒரு அற்புதமான வாய்ப்பாக எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால் இந்தத் தொடரில் எனக்கான போட்டி அதிகரித்துள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இந்த தொடர் மிகவும் கடினமானது. இந்த தொடரில் சாஹல்,குல்தீப், ஜடேஜா, க்ருனால் பாண்டியா மற்றும் ராகுல் சாகர் போன்ற ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருப்பதால் என்னுடைய இடத்தை நான் தக்கவைத்துக்கொள்ள கண்டிப்பாக என்னுடைய தனித்திறனை நான் காண்பிக்க வேண்டும்.

sundar

மேலும் அறிமுகம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அணியில் எனக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை. அதற்காக ஒவ்வொரு நாளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்னுடைய கடின உழைப்புக்கும் என்னுடைய விடாமுயற்சிக்கும் இந்த தொடர் ஒரு சோதனை அமையவுள்ளது. இரண்டு ஆண்டுகளாகியும் எனக்கு வாய்ப்பு அவ்வப்போது கிடைப்பதால் இந்த தொடரில் என்னை நிரூபிக்க உள்ளேன் என்று வாஷிங்டன் சுந்தர் பேட்டியளித்துள்ளார்.

Advertisement