அஷ்வின் விட்ட இடத்தில் இருந்தே முதல் விக்கெட்டை கைப்பற்றி அசத்திய வாஷிங்க்டன் சுந்தர் – விவரம் இதோ

sundar 2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பன் மைதானத்தில் இன்று 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களான அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

indvsaus

அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணியில் 4 மாற்றங்களாக அறிமுக வீரர்களாக நடராஜன், சுந்தர் ஆகியோரும், ஷர்துல் தாகூர் மற்றும் அகர்வால் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் முக்கிய மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக அந்த இடத்தில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அசத்தலாக பந்துவீசி வருபவர் அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகவே ஷாட்டர் பார்மட்டில் கலக்கி வரும் சுந்தர் இந்த டெஸ்ட் தொடரில் அணி வீரர்களின் காயம் காரணமாக வாய்ப்பினைப் பெற்றார். அதிலும் குறிப்பாக அஸ்வின் கடந்த போட்டியின்போது காயம் அடைந்து நான்காவது போட்டியில் விளையாட முடியாத சூழலில் அவரது இடத்தில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் இருந்தால் சரியாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே வாஷிங்டன் சுந்தர் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

sundar 3

இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சுந்தர் சிறப்பாக பந்துவீசி உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தியுள்ளார். 77 பந்துகளை சந்தித்த ஸ்மித் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் குவித்து இருந்தபோது வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீச அந்த பந்தினை அடித்த ஸ்மித் ரோஹித் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் வெளியேறினார். ஆட்டம் இழந்ததும் சில நிமிடம் திகைத்து நின்ற ஸ்மித் அதன் பிறகுதான் அதை உணர்ந்து களத்தில் இருந்து வெளியேறினார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே மிகப்பெரிய விக்கெட்டை சுந்தர் வீழ்த்தியுள்ளது தற்போது சமூக வலைதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து இதுபோன்று சிறப்பாக பந்து வீசினால் டெஸ்ட் அணியிலும் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது.

Advertisement