தமிழ்நாட்டு லீக் போட்டியிலும், அசத்தும் வாஷிங்டன் சுந்தர்…எத்தனை விக்கெட் வீழ்த்தினார் தெரியுமா ?

washington
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.அறிமுகமான முதல் தொடரிலேயே தொடர்ந்து சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றவர் வாஷிங்டன் சுந்தர்.

- Advertisement -

இலங்கை முத்தரப்பு தொடருக்கு பின்னர் வாஷிங்டன் சுந்தர் தற்போதுதமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் குளோப் ட்ரோட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். அரையிறுதி போட்டியில் குளோப் ட்ரோட்டர்ஸ் மற்றும் இந்தியா பிஸ்டோன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குளோப் ட்ரோட்டர்ஸ் அணி முதல் இன்னிங்சில் 232 ரன்கள் எடுத்தது.பின்னர் விளையாடிய இந்தியன் பிஸ்டோன்ஸ் அணி 178ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் வெறும் 38 ரன்களை மட்டும் விட்டுத்தந்து 7விக்கெட்டுகளை சாய்த்தார்.

sunder

வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பவுலிங்கால் குளோப் ட்ரோட்டர்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 54 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய குளோப் ட்ரோட்டர்ஸ் ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது.

Advertisement