இந்திய அணியில் எனக்கு இந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது பாக்கியம் – வாஷிங்க்டன் சுந்தர் பேட்டி

Sundar-1
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட தயாராகிக்கொண்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதிலும் குறிப்பாக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி மேட்ச் வின்னிங் இன்னிங்சை விளையாடினார்.

sundar 2

- Advertisement -

அவரது இந்த சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டும் அசத்தலாக இருந்ததால் அவர் நிறையவே பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்நிலையில் தான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினாலும் தனக்கு ஒரு ஆசை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் :

டெஸ்ட் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் என்னை பொறுத்தவரை அது ஒரு வரம். ஏனெனில் எங்களது அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கிரிக்கெட் விளையாடிய காலங்களில் சவாலை மிகவும் ஆவலாக எதிர்கொண்டு விளையாடினார். அதே போன்று நானும் விளையாட நினைக்கிறேன்.

Sundar-1

பந்துவீச்சாளராக அணிக்குள் வந்து துவக்க வீரராக மாறிய வெற்றிக் கதையை அவர் எங்களிடம் சொல்வார். அதை நான் எனக்கான உத்வேகமாக எடுத்துக்கொண்டேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வேகமும் பவுன்சும் அதிகம் இருக்கும். எனவே அதுபோன்ற மைதானங்களில் பந்து வீச சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

sundar 3

ஆடுகளத்தில் விளையாடும்போது முதல் நாள் பந்துவீச்சு கைகொடுக்க வில்லை இருந்தாலும் நான் ஸ்மித்தை வீழ்த்தியது மகிழ்ச்சி. இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement