18 வயதில் இப்படியொரு விருது வாங்கியது பெருமையாக உள்ளது – வாஷிங்டன் சுந்தர் !

washington
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.இந்த தொடரில் லீக்சுற்றுகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி முதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

sundar

- Advertisement -

கடந்த 16ம் தேதி கடைசிலீக்கில் இலங்கையுடன் மோதிய வங்கதேச அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

தொடர்நாயகன் விருது பெற்ற பின் பேசிய அவர் “இந்த இளம்வயதில் இப்படியொரு விருது வாங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை ஊக்கப்படுத்திய எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. பவர்பிளேயில் பந்துவீசுவதை எப்போதும் விரும்புகின்றேன். எதிரணியினரின் எண்ண ஓட்டத்தை அறிந்து பந்துவீச முயற்சி செய்தேன். அதற்கு கிடைத்த வெற்றி தான் இது. நாட்டிற்காக விளையாடியதில் மகிழ்ச்சி. இதைவிட சிறப்பாக இனிவரும் காலங்களில் விளையாடுவேன்” என்றார்.

karthik

Advertisement