IPL : பவர்பிளேயில் கலக்குவார் வாஷிங்டன் சுந்தர்…சேஹல் நம்பிக்கை – காரணம் இதுதான் ?

sundar
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சர்வதேச போட்டிகளில் முதன்முறையாக இலங்கையில் நடந்து முடிந்த நிடாஸ்கோப்பை முத்தரப்பு தொடரில் தான் அறிமுக வீரராக களமிறங்கினார்.அறிமுக வீரராக களமிறங்கிய மொதல் தொடரிலேயே பந்துவீச்சிலும்,பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
chahal

வாஷிங்டன் சுந்தர் இந்த ஐபிஎல் தொடரில் விராட்கோலியின் தலைமையிலான பெங்களூரு அணிக்காக விளையாடிட உள்ளார். அவருடன் இணைந்து பந்து வீச மற்றொரு பெங்களூரு வீரரான சேஹலும் தயாராக உள்ளார்.வாஷிங்டன் சுந்தரை பொறுத்தவரையில் விராட்கோலியின் தலைமையில் விளையாடவுள்ள முதல் தொடர் இதுதான்.

- Advertisement -

அனைத்து சீசன்களிலும் பலமான அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி திகழ்ந்தாலும் இதுவரையில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.இந்தமுறை விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி எப்படியாவது கோப்பையை வென்றே தீர வேண்டும் என்கிற வெறியுடன் களமிறங்குகின்து எனலாம்.

sundar

வளர்ந்து வரும் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சும்,பேட்டிங்கும் இந்த ஐபிஎல்-இல் பெரும் பக்கபலமாக இருக்குமென கிரிக்கெட் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மற்றொரு பந்துவீச்சாளரான சேஹல், வாஷிங்டன் சுந்தரை பற்றி குறிப்பிடுகையில் “வாஷிங்டன் சுந்தர் இக்கட்டான சூழல்களை அறிந்து மிகச்சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.

இலங்கையில் நிடாஸ்கோப்பை தொடரின் போது சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் பவர்பிளேயில் ரன்களை மட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.அவர் பவர்பிளேயில் ரன்களை கட்டுக்குள் கொண்டுவந்தால் நான் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவேன். இருவரும் இணைந்து இந்த ஐபிஎல்-இல் பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருப்போம்.

ஏற்கனவே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடிய அனுபவம் எனக்கு இருக்கின்றது. இருப்பினும் சின்னசாமி மைதானம் பேட்டிங் பிட்ச் என்பதால் இலகுவாக 200ரன்கள் வரையிலும் அடிக்கமுடியும். இந்த முறையும் பேட்டிங் பிட்சாக தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அதையும் தாண்டி நாங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்” என்றார்.

Advertisement