4 ஆவது போட்டியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் நிதீஷ் ரெட்டி – அவருக்கு பதிலாக விளையாடப்போவது யார்?

Nitish
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியவரும் இந்திய அணியானது முதல் மூன்று ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள வேளையில் நாளை டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கும் நான்காவது “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நிதீஷ் குமாருக்கு பதிலாக இடம்பெறப்போகும் வீரர் :

ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த கையோடு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : மெல்போர்ன் மைதானம் சுழற் ந்து வீச்சுக்க சாதகமாக செயல்படும் என்பதால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் நாளைய நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்து விட்டதால் ஜடேஜா விளையாடப்போவது உறுதி.

கூடுதலாக இருக்கும் ஒரு இடத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகிய இருவருக்கு வாய்ப்புள்ளது. அதில் தனுஷ் கோட்டியானை விட வாஷிங்டன் சுந்தர் முன்னிலையில் இருப்பதால் அவரே நாளைய நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

சமீபத்தில் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் வாஷிங்டன் சுந்தர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மாற்றுவீரராக பார்க்கப்பட்டு வருவதால் நாளைய நான்காவது போட்டியிலும் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவருக்கு இடம் கிடைக்கும் பட்சத்தில் ரவீந்திர ஜடஜாவிற்கு பின்னர் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படுவார்.

இதையும் படிங்க : என்னோட முதல் போட்டியிலேயே அவரை எதிர்த்து விளையாட இருப்பது மகிழ்ச்சி – சாம் கோன்ஸ்டாஸ் வெளிப்படை

அதேபோன்று புது பந்திலும் அவர் சிறப்பாக பந்துவீசக்கூடியவர் என்பதனால் அவரால் பந்துவீச்சிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதன் காரணமாக நிதீஷ் குமார் ரெட்டி வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்க்டன் சுந்தர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

Advertisement