
தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார். அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியின் போது காயமடைந்த அவர் அந்த போட்டிக்கு பின்னர் வெளியேறி மருத்துவ பரிசோதனையிலும் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்தது கண்டறியப்பட்டது.
அதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகிய அவர் அடுத்து தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்தும் விலகினார். இதன் காரணமாக அவர் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக முழு உடற்தகுதியை எட்டி இந்திய அணிக்கு திரும்புவாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேவேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் விலகியதால் அவருக்கு பதிலாக தற்போது ரவி பிஷ்னாய் இணைந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் 26 வயதான வாஷிங்டன் சுந்தர் எதிர்வரும் டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற வேண்டுமெனில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற இருக்கும் உடற்தகுதி சோதனையில் தனது திறனை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அதன் காரணமாக அவர் அந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு ஒருவேளை அவர் உடற்தகுதியை எட்டவில்லை எனில் மாற்று வீரரும் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு அண்மை தகவலின் படி :
இதையும் படிங்க : விளையாட வந்து 12 வருஷம் ஆயிடுச்சி.. சாக்கு போக்குலாம் வேணாம்.. சஞ்சு சாம்சன் குறித்து – யுஸ்வேந்திர சாஹல் பேச்சு
வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டார் என்றும் அவர் இன்னும் ஒருசில தினங்களில் பந்து வீசுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அப்படி அவர் பந்து வீசும் பட்சத்தில் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற இருக்கும் உடற்தகுதி தேர்வில் தனது பந்துவீச்சு திறனையும் நிரூபித்து விட்டால் நேரடியாக இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.