2 நாள் முன்னாடி தான் சொன்னாங்க.. அஸ்வின் நிறைய ஹெல்ப் பண்ணாரு.. 7 விக்கெட்ஸ் எடுத்தது பற்றி சுந்தர்

Washington Sundar 4
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. எனவே இப்போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்தை 259 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65, டேவோன் கான்வே 76 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர். பின்னர் விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 16-1 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

அசத்திய தமிழக வீரர்கள்:

ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் களத்தில் ஜெய்ஸ்வால் 6*, சுப்மன் கில் 10* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படாத தாம் 2வது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது பற்றி 2 நாட்கள் முன்பாக ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் தெரிவித்ததாக வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார். அத்துடன் 7 விக்கெட்டுகள் எடுப்பதற்கு சக தமிழ்நாட்டு அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உதவியதாகவும் சுந்தர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் விளையாடப் போகிறேன் என்பது இரண்டு நாட்கள் முன்பாக தெரியும். முதல் போட்டிக்கான அணியில் இல்லாத நிலையில் இப்போட்டியில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் சிறந்தது. அதற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். சிறிது நேரத்துக்கு பின் பந்து மிகவும் மென்மையாக மாறியது. அதனால் நாங்கள் அதிக வேகத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது”

- Advertisement -

அஸ்வின் உதவி:

“அதைப்பற்றி நானும் ஆஷும் (அஸ்வின்) தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். உணவு இடைவெளிக்கு பின் போட்டிக்குள் வந்துள்ளதாக தெரிவித்த அஸ்வின் அதைப் பின்பற்றியே டேவோன் கான்வேயை அவுட்டாக்கினார். நாங்கள் பேசியதை செய்தோம். நான் அதிகமாக எதையும் மாற்றவில்லை. ஸ்பின்னர்களுக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பிட்ச்சில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சரியான இடத்தில் பந்து வீச முயற்சித்தேன்”

இதையும் படிங்க: 100 மில்லி 80 ரூபாய்.. 2வது டெஸ்டில் இந்திய ரசிகர்களுக்கு நேர்ந்த சோகத்தால் போராட்டம்.. வெளியான அறிவிப்பு

“உண்மையில் நானும் அஸ்வினும் நிறைய பேசிக் கொண்டோம். அவர் ஏராளமான தரம், திறன் மற்றும் அனுபவத்தைக் கொண்டு வருகிறார். அவருடன் விளையாடும் போது அந்த விஷயங்கள் நமக்கும் உதவும். எனக்கும் அது உதவியது ஸ்பெஷல். இதே போல நாங்கள் இன்னும் நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement