96 ரன்கள் நாட்அவுட். சதத்தை தவறவிட்டாலும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு – நெகிழ்ச்சி சம்பவம்

Sundar-4

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனை தொடர்ந்து நேற்று இரண்டாம் நாளாக தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது. சுந்தர் 60 ரன்களிலும், அக்சர் படேல் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்

Pant

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் வீரர்கள் சுந்தர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் இன்று 97 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இல்லையென்றால் இவர் ஒரு அசத்தலான அரை சதத்தை அடித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் அக்சர் பட்டேல் ஆட்டம் இழுந்ததும் அடுத்த ஓவரின் முதல் பந்தில் இஷாந்த் சர்மாவும், நான்காவது பந்தில் சிராஜ்யும், ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் விட்ட 60 ரன்களுடன் தொடர்ந்த சுந்தர் இன்று சிறப்பாக விளையாடி 174 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 96 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

axar

ஒருகட்டத்தில் சுந்தர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் 8வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்திருக்க நிச்சயம் வாஷிங்டன் சுந்தர் சதம் அடிப்பார் என்றும் அக்சர் பட்டேல் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்சர் பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் வெளியேற வாஷிங்டன் சுந்தரின் முதல் டெஸ்ட் சதம் தவறிப் போனது. ஏற்கனவே சென்னை டெஸ்ட் போட்டியிலும் 85 ரன்கள் நாட் அவுட் என்று இருந்த நிலையில் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியிலும் 96 ரன்கள் நாட் அவுட் என்று சுந்தர் தனது முதல் சதத்தை தவறவிட்டார்.

- Advertisement -

மேலும் முதல் இன்னிங்ஸ் முடிந்து மைதானம் நோக்கி திரும்பும்போதும் இந்திய அணியின் வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் மைதானத்திலிருந்த ரசிகர்கள் என அனைவரும் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி வரவேற்பு கொடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலிய தொடரின் போது அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.