இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் பத்தாவது ஐ.சி.சி-யின் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
டி20 உலககோப்பை தொடரில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் :
இந்த தொடரில் சூரியகுமார் யாதவின் தலைமையிலான இந்திய டி20 அணியானது நடப்பு சாம்பியனாக களமிறங்க இருக்கும் வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது பங்கேற்று விளையாடி இருந்த வாஷிங்டன் சுந்தர் முதலாவது போட்டியின் போது காயமடைந்தார். அதன் பின்னர் எஞ்சியிருந்த இரண்டு ஒருநாள் போட்டிகளையும் தவறவிட்ட அவர் டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் வெளியேறியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் இரண்டு வாரங்கள் கூடுதலாக கால அவகாசம் எடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்று தெரிகிறது.
இதையும் படிங்க : ஜெயிக்குறது மட்டுமில்லாம அந்த பயத்தையும் இந்திய அணி எதிரணிகளுக்கு தராங்க – சுனில் கவாஸ்கர் புகழாரம்
ஒருவேளை அப்படி அவரால் திரும்ப முடியாமல் போகும் பட்சத்தில் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலிருந்து வெளியேறவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக யார் தேர்வாவார்கள் என்பது குழப்பமாகியுள்ளது. இது குறித்த முடிவில் பிசிசிஐ என்ன செய்யப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.



