சென்னை டெஸ்ட் போட்டியில் என் மகன் சதமடிப்பது உறுதி – சவால் விட்ட இந்திய வீரரின் தந்தை

Sundar-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சென்னை மைதானத்தில் துவங்கி உள்ளது. இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது முதல் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை குவித்துள்ளது. அஷ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இணைந்து விளையாடுகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த டெஸ்ட் போட்டிகள் வாஷிங்க்டன் சுந்தர் நிச்சயம் சதம் அடிப்பார் என்று அவரது தந்தை சுந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் :

ரஞ்சிப் போட்டியில் முதல் சதத்தை சேப்பாக்கம் மைதானத்தில் தான் முதல் சதத்தை பதிவு செய்தார். அதுவும் மிக இளம் வயதிலேயே அவர் அந்த சாதனையை செய்து காட்டினார். அதேபோன்று இன்று தொடங்கியுள்ள இந்த டெஸ்ட் போட்டியில் நிச்சயம் சுந்தர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை பதிவு செய்வார் என்று கூறினார்.

sundar 3

மேலும் இந்த போட்டி குறித்து பேசிய அவர் கூறுகையில் : அஸ்வின் மற்றும் சுந்தர் ஆகிய இருவருமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்திலிருந்து இரு வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல இளம் வீரர்களுக்கு இது பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் தந்தை கூறினார்.

sundar

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகி இருந்த சுந்தர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டும் இன்றி அரை சதத்தை அடித்து தான் ஒரு சிறப்பான வீரர் என்பதை நிரூபித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .அப்போதே சுந்தரின் தந்தை பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் வாஷிங்க்டன் சதத்தை தவறவிட்டது தனக்கு வருத்தம் அளிப்பதாக பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement