இந்த நிலைமை இப்படியே நீடித்தால் என் முடிவு இதுவாகத்தான் இருக்கும். குண்டை தூக்கி போட்ட வார்னர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

Warner

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. பல பிரச்சனைகளை கடந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

Aus

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி பல முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி தற்போதைய நட்சத்திர வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஈ.எஸ்.பி.என். கிரின்போ இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ள டேவிட் வார்னர் கூறுகையில் :

எப்போது கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட போகிறேன் என்பது தெரியவில்லை மேலும் போட்டிகள் எப்போது தொடங்கப் போகிறது ? எத்தனை போட்டிகளில் விளையாட போகிறோம் ?என்பது பெரிய விஷயமல்ல. என்னை பொருத்தவரை குடும்ப நலனை மிகவும் முக்கியம். கொரோனா உயிர் பாதுகாப்பு வளையத்தில் விளையாடுவதில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

Warner

இதனால் குடும்பத்தை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்திருக்க வேண்டிய அவசியம் வரும் எனவே தற்போதைய சூழ்நிலை நீடித்தால் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்றும் ஓய்வு பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியதாக இருக்கலாம் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

எனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கும் நான் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் அவர்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எப்பொழுதும் உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில் இதையெல்லாம் நாம் கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

warner 1

வார்னரின் இந்தப் பேட்டியை கண்ட ரசிகர்கள் வார்னர் தனது ஓய்வு முடிவு குறித்து பேச ஆரம்பித்ததால் வருத்தத்தில் உள்ளனர். அவரின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.