டெஸ்ட் கிரிக்கெட்டில் நடராஜன் அசத்துவாரா ? சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னரின் பதில் இதுதான் – விவரம் இதோ

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரில் சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர் தங்கராசு நடராஜன். அந்த அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார் தங்கராசு நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும் அவரது அபார பந்துவீச்சு திறமையாலும் தொடர்ந்து அவருக்கு டி20 அணி மட்டுமின்றி ஒருநாள் அணியிலும் அடுத்தடுத்து இடம் கொடுக்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் இதுவரை சரியாக பயன்படுத்தியுள்ளார்.

Nattu

- Advertisement -

ஒருநாள் தொடர் முடிவடைந்தவுடன் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரதுல் தாகூர் போன்ற வீரர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படாமல் வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீரர்களாக இந்திய அணி வைத்துக்கொண்டது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் அடைந்து விட்டார். அதனால் இவர்களில் ஒருவர் இந்திய அணியில் இணையும் வாய்ப்பு இருந்தது.

இதன் காரணமாக ஒரு பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர்களாக தங்கராசு நடராஜன் மற்றும் தாக்கூர் ஆகிய இருவர் மட்டுமே இருக்கின்றனர். சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக முதல் போட்டியிலேயே வெளியேறிவிட்டார். இந்நிலையில் மீதமிருக்கும் இரண்டு பேரை வைத்து பார்த்தால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜனுக்கு தான் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

பயிற்சியில் பந்து சென்ற தங்கராசு நடராஜன் அடுத்தடுத்து ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி என வரிசையாக வாய்ப்பை பெற்றுள்ளது கிரிக்கெட் உலகை வியக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் கன் ரைசே ஹைதராபாத் அணியில் அவருக்கு கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் நடராஜன் டெஸ்ட் அணியில் அறிமுகமாவது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

Nattu

டி20 போட்டிகளில் நடராஜன் ஆடியதை போல் டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக ஆடுவாரா ? என்பது தெரியாது. அதனை உறுதியாக சொல்லமுடியாது. மிகச் சிறப்பாக பந்து வீசுபவர் நடராஜன். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் அவரது பந்துவீச்சு எந்த அளவிற்கு ஈடுபடும் என்பது அடுத்தடுத்து அவர் பந்துவீசும் போது தான் சரியாக சொல்ல முடியும். ஆனால், 100% அதனை சொல்லிவிட முடியாது என்று தெரிவித்து இருக்கிறார் டேவிட் வார்னர்.

Advertisement