என்னதான் நான் அதிரடியாக ஆடினாலும் எங்களின் இந்த வெற்றிக்கு இதுவே காரணம் – வார்னர் பேட்டி

Warner
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 74 ரன்கள் குவித்தார்.

dhawan

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை விளாசி 37.4 ஓவர்களில் 258 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களான வார்னர் 128 ரன்களும், பின்ச் 110 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் வார்னர் கூறியதாவது : எப்பொழுதும் நான் ரன்களை குவிக்க வேண்டும் என்ற தாகத்தோடு விளையாடி வருகிறேன். மேலும் எப்பொழுதும் சிறப்பான துவக்கத்தை கொடுக்கவேண்டும் என்றும் நான் ரன்களை குவித்து வருகிறேன். இந்த போட்டியில் எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்தியாவை இந்த மைதானத்தில் 255 ரன்களில் சுருட்டுவது என்பது மிகச் சிறப்பான ஒன்று. அதனை எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் செய்து காட்டினார்கள்.

Warner

பின்ச் சிறப்பான துவக்கம் கொடுத்தார் மேலும் என்னை ஃப்ரீயாக விளையாட நேரம் கொடுத்தார் மிடில் ஓவர்களில் ரன்கள் நன்றாக வந்தன. எங்கள் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவியது. இந்த போட்டியை இறுதிவரை எடுத்துச் சென்றதில் மகிழ்ச்சி நான் எப்போதும் கடினமாக பயிற்சி செய்து வருகிறேன். மேலும் நான் கிரிக்கெட்டை மிகவும் நேசித்து விளையாடி வருகிறேன் அதேபோன்று என்னுடைய பிட்னஸ்லும் கவனம் செலுத்தி வருகிறேன் என்று வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement