இவரது பந்துவீச்சில் எப்படி பேட்டிங் செய்வது என்றே தெரியவில்லை. இந்திய பந்துவீச்சாளரை புகழ்ந்த – டேவிட் வார்னர்

warner

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வார்னர் மற்றும் பின்ச் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது.

Finch

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் டேவிட் வார்னர் கூறியதாவது : பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது ஆடாமல் அசையாமல் நேர்கொண்ட பார்வையுடன் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவர் நீண்டதூரம் ஓடி வந்து பிறகு தள்ளாடி திடீரென 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

அவரது பந்துவீச்சிற்கு எதிராக பேட்டிங் செய்ய சிறிது நேரம் தேவைப்பட்டது. அவரிடம் உள்ள திறமை சிறப்பானது. அவரது பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்கள் என அனைத்தும் சர்ப்ரைசாக வருகிறது. அதே போன்று ஸ்லோ பந்துகளையும் திடீரென வீசுகிறார். எனவே அவரின் பந்துகளை ஆடுவது சற்று கடினமாகவே உள்ளது.

Bumrah-1

மலிங்கா அவரது புகழ் உச்சத்தில் இருந்த போது எவ்வாறு வீசினாரோ அதை போன்று தற்போது பும்ரா பந்துவீசி வருகிறார் என்று வார்னர் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பும்ரா சிறப்பாக பந்துவீசினாலும் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -