கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் மக்கள் நலத் துறை ஊழியர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். தங்களுடைய உடல்நிலை பற்றி கவலைப்படாமல் 24 மணி நேரமும் அவர்கள் உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். உலகம் முழுவதும் நோய்தொற்று அச்சுறுத்தி வருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் உழைத்து அயராது போராடி வருகிறார்கள்.
இந்த மருத்துவப் பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒரு வித்தியாசமாக ஊக்கமளிக்கும் வகையில் மக்கள் செய்கைகளைச் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் கூட பிரதமர் மோடி கைத்தட்ட சொன்னதை பலரும் மறுக்காமல் செய்தனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் துவக்க அதிரடி வீரர் டேவிட் வார்னர் வித்தியாசமாக ஒன்றினை செய்துள்ளார். அவர் தன்னுடைய தலை முடியை மருத்துவர்களுக்கான சேவ் செய்து கொண்டு மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
அதன்மூலம் தனது தலைமுடி அத்தனையையும் மொட்டை அடிக்கிறார். மொட்டை அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவன் ஸ்மித் பலரையும் இதேபோல் செய்ய முடியுமா என்று கேட்டு டேக் செய்துள்ளார். யார் யார் டேவிட் வார்னரின் இந்த சேலஞ்சை யார் ஏற்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
வார்னரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் இதுபோன்ற வித்தியாசமான முறையில் தங்களது நன்றியை மருத்துவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.



