தற்போதுள்ள எந்தவொரு வீரராலும் விராட் கோலியின் இந்த ஒரு சாதனையை முறியடிக்க முடியாது – டேவிட் வார்னர் கருத்து

warner
- Advertisement -

தற்போதைய நவீன கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை எங்களால் நெருங்ககூட முடியாது என்று, விராட் கோலியின் ஒரு சாதனையை குறிப்பிட்டு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் வீரரான டேவிட் வார்னர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 71 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

kohli 1

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து, சர்வதேச கிரக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் தனியார் கிரிக்கெட் இணையதளம் ஒன்று, நிகழ்காலத்தில் கிரக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் அதிக சதங்கள் அடித்துள்ள முதல் பத்து வீரர்களின் பட்டியலை அவர்களின் புகைப்படத்துடன் வெளியிட்டது. அந்த பட்டியலில் 70 சர்வதேச சதங்கள் அடித்துள்ள விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். 43 சதங்கள் அடித்துள்ள டேவிட் வார்னர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அந்த பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ள தென் ஆப்ரிக்காவின் டுயூப்ளசிஸ் அடித்துள்ள சதங்களின் எண்ணிக்கை 23ஆக இருக்கிறது.

அந்த பட்டியலைப் பார்த்த டேவிட் வார்னர், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த பட்டியலில் இருக்கும் எவராலும் விராட் கோலியை நெருங்க்கூட முடியாது என்று அந்த பட்டியலின் கீழ் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். டேவிட் வார்னரின் இந்த கருத்திற்கு மிகச் சரியான காரணம் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இருக்கும் அவருக்கும் விராட் கோலிக்கும் இடையிலேயே 27 சதங்கள் வித்தியாசம் இருக்கிறது.

warner

மேலும் அந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் வீரர்களான கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா, டெய்லர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ ஸ்மித் போன்றோரால் விராட் கோலி படைத்திருக்கும் சாதனையின் அருகில்கூட செல்ல முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. விராட் கோலி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 43 சர்வதேச சதங்களும், டெஸ்ட போட்டிகளில் 27 சதங்களும் அடித்திருக்கிறார்.

Kohli

சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடிக்கக் கூடிய திறமை தற்போது விராட் கோலிக்கு மட்டுமே உள்ளது. மேலும் அதிக சர்வதேச சதங்கள் அடித்தவர்களின் பட்டயலில் முதல் பத்து இடத்தில், தற்போது கிரிக்கெட் விளையாடும் வீர்ர்களிலேயே விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement