இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. அடுத்து இந்திய அணி ஆக்ரோஷத்துடன் டி20 தொடரை விளையாட ஆரம்பித்தது. இதையடுத்து முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெறித்தனமாக விளையாடி வெற்றி பெற்றது இந்திய அணி. இதன்மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
ஒருநாள் மற்றும் டி20 தொடரை தொடர்ந்து வருகின்ற 17 ம் தேதி டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலைட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் முதல் டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாட போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது இடுப்பில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சில நாட்களுக்கு ஓய்வு தேவை என்று கூறியதால் கடைசி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் டேவிட் வார்னரால் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில் டி20 தொடரில் விளையாடாத வார்னர் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க, தற்போது முதல் டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர் விளையாட போவதில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய டேவிட் வார்னர் “தனது காயம் முன்பை விட சிறப்பாக குணமாகி வருகிறது. இதற்காக நான் தீவிர பயிற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் முழுமையாக குணமடைந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவேன்” என்றார் டேவிட் வார்னர்.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியின் போது கன்கஷன் முறையில் வெளியேறிய ஜடேஜாவும் முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த வீரர்களின் விலகல் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவது குறிப்பிடத்தக்கது.