நடராஜன் வீசிய பந்து குறித்து சர்ச்சை கருத்தினை கூறிய ஷேன் வார்ன் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Warne
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் 15ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் 369 ரன்களையும், இந்திய அணி 336 ரன்களையும் குவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது.

nattu 1

- Advertisement -

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் மழை பாதிப்பினால் 1.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு 4 ரன்கள் மட்டுமே அடித்து 4 ஆம் நாள் ஆட்டத்தை இந்திய அணி முடித்தது. அதனை தொடர்ந்து 5 நாள் முழுவதும் விளையாட இருக்கும் இந்திய அணி 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு வீரர்கள் காயமடைந்தனர்.

இதன் காரணமாக நான்காவது போட்டியில் தமிழக வீரர் நடராஜன் மற்றும் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்தனர். தனது முதலாவது போட்டியிலேயே நடராஜனும், சுந்தரும் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தனர். ஆஸ்திரேலிய தொடருக்கு நெட் பவுலராக வந்த நடராஜன் தற்போது மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமானது பெரிய சாதனையாக சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது.

nattu 2

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இந்த டெஸ்ட் போட்டியில் நடராஜன் வீசிய “நோ பால்” குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடராஜன் வீசிய நோ பால்களில் சுவாரசியமான விஷயம் ஒன்று எனக்கு தெரிகிறது. அவர் வீசிய ஏழு நோ பால்களும் மிகப்பெரிய நோ பால்கள் அதுமட்டுமின்றி ஐந்து நோ பால்கள் ஓவரின் முதல் பந்தில் வீசப்பட்டவை. நாங்களும் இதுபோன்ற நோ பால் வீசியுள்ளோம் ஆனால் குறிப்பாக ஒரு ஓவரின் முதல் பந்தில் நோ பால் வீசுவது என்பது ஒரு சுவாரஸ்யமான விடயம் தான் என்று சர்ச்சையாக கூறியுள்ளார்.

Nattu

இவர் கூறியதை வைத்து பார்க்கும்போது நடராஜன் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருப்பார் என்பது போல மறைமுகமாக ஷேன் வார்ன் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை கவனித்த ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக தங்களது கண்டனங்களையும், அவருக்கு எதிரான கருத்துக்களையும் காட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement