ஸ்மித்துக்கு எதிராக இப்போது உள்ள பவுலர்களில் இவரால் மட்டுமே அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியும் – வார்னே பேட்டி

Warne
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்கு பின்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய ஸ்மித் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார். அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்துக்கு எதிரான நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து குறிப்பிடத்தக்கது.

Smith

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான அந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமே அந்த அணியின் பேட்ஸ்மேனான ஸ்மித் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்துதான். இந்நிலையில் ஸ்மித் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான வார்னே பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஸ்மித் தடைக்கு பிறகு மீண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது அவர் ஆஷஸ் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகிறார் என்பதும் அவரது பேட்டிங் பாணியில் தெரிகிறது. இந்நிலையில் அவரை சவால் விடும் வகையில் பந்து வீச ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே இருக்கிறார்.

Archer

அவர் யாரெனில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் தான். உலக கோப்பை தொடரில் தனது வேகத்தாலும் துள்ளியத்தாலும் மிரட்டியவ.ர் ஆஷஸ் தொடரில் சிறப்பாக பந்து வீசுவார் மேலும் இவர் ஸ்மித்துக்கு கடுமையான நெருக்கடியை இவரே அளிப்பார் என்று கூறினார். இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பை தொடரில் அறிமுகமான ஆர்ச்சர் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement