ரஹானே அடித்த இந்த சதம் சாதாரண ஒன்று அல்ல. தரமான சம்பவம் – புகழ்ந்து தள்ளிய வார்னே

warne
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி தற்போது பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றிபெற்றதால் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்க ஆஸ்திரேலிய அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்வியை ஈடுசெய்யும் விதமாக இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணியும் விளையாடி வருகிறது.

Gill 2

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அடுத்ததாக முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

துவக்க வீரரான சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரில் தனது 12 ஆவது சதத்தை பதிவு செய்த ரஹானே அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். ஏனெனில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்பது மிகவும் சிறப்பான ஒரு போட்டியாக அனைத்து அணிகளாலும் பார்க்கப்படும் ஒரு போட்டியாக அமையும். இந்த போட்டியில் அவர் சதம் விளாசியுள்ளது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

Rahane

மேலும் அவரது இந்த சதம் குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே அவர் குறித்து கூறுகையில் : கிரிக்கெட் விளையாட்டில் பதிவு செய்யப்படும் நூற்றுக்கணக்கான சதங்களில் இதுவும் ஒன்று என கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஒரு போக்கு மற்றும் ஆடுகளத்தின் தன்மை, உலகத்தரமான பந்துவீச்சு என அனைத்திற்கும் எதிராக போராடி பதிவு செய்யப்பட்டுள்ள சதம் இது.

rahane 1

அப்படி ஒரு தரமான சதம் இது இதனை என்னால் சாதாரண சதம் என்று கூறமுடியாது. இது மிகச்சிறப்பான சதங்களில் ஒன்று இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. மேலும் கோலி இந்த சதத்தை பார்த்து அசந்து இருப்பார் எனவும் வார்னே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement