உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோற்பதற்கு இதுவே காரணம் – மனம்திறந்த வக்கார் யூனிஸ்

Younis
- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றால் எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு தனி மகிழ்ச்சியான ஒரு போட்டியாக இருக்கும். ஏனெனில் இரு அணிகளும் கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் அணிகள். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால் இந்திய ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் இருக்கும் ரசிகர்களுக்கும் இது பரபரப்பான, விறுவிறுப்பான போட்டியாக அமையும்.

Pak

இரு அணிகளுமே பல ஆண்டுகளாக சம பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது. எப்போதெல்லாம் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பு அதிகளவு இருக்கும். அந்த அளவிற்கு இரு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் அனல் பறக்கும்.

- Advertisement -

இதில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் கை தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஓங்கியிருக்கிறது. மேலும் இரு அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறாமல் இருந்த போதிலும் ஐசிசி தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். ஆனால் இதுவரை பாகிஸ்தான் அணி ஐசிசி தொடரில் இந்திய அணியை வீழ்த்தியதே இல்லை என்ற ஒரு சாதனை நம்மிடம் இருக்கிறது.

Pakistan

குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே கிடையாது. இந்நிலையில் இப்படி இந்தியாவை பாகிஸ்தான் அணியை வீழ்த்த முடியாதது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், ஃபாஸ்ட் பவுலருமான வக்கார் யூனுஸ் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

- Advertisement -

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையோடு களமிறங்கி அருமையாக விளையாடியது. ஆனாலும் இந்திய அணியால் இறுதிப்போட்டியில் வெற்றி பெறவில்லை மற்றபடி சிறப்பாகவே ஆடியது. பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் நாங்கள் அந்த தொடரில் ஸ்மார்ட்டாக விளையாட தவறிவிட்டோம். மேலும் 201,1 1096 ஆகிய உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. இருந்தாலும் அதை எங்கள் அணி தவறவிட்டது.

pakisthan

உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தவே முடியாது என்பதற்கு ஒரு காரணத்தை என்னால் சொல்ல முடியாது. உலகக்கோப்பை போட்டியில் இருக்கும் அழுத்தம் மற்றும் அப்போது வீரர்களின் என பல்வேறு செயல்பாடுகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அமைந்துவிடுகிறது. அதே நேரத்தில் இந்திய அணி வீரர்கள் அந்த அழுத்தத்தை சரியாக சமாளித்து விளையாடுகின்றன.ர் அதன் காரணமாகவே எங்களை அவர்கள் எளிதாக வீழ்த்த முடிந்தது என்று வக்கார் யூனிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement