இந்த இந்திய வீரர் பேட்டிங் செய்யும் வரை எங்களுக்கு வெற்றி கிடைக்காது. அவ்ளோ நோகடிச்சிருக்காரு – வக்கார் யூனிஸ் பேட்டி

Younis
- Advertisement -

1999 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னையில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 12 வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது .இந்திய அணிக்கு இந்த போட்டியில் 271 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர் முதல் ஆட்டத்தில் டக் அவுட் ஆகி இருந்தாலும் இரண்டாவது ஆட்டத்தில் 136 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டினார்.

Sachin

81 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அதன் பின்னர் அதிரடியாக ஆடினார் சச்சின் டெண்டுல்கர். இருந்தாலும் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டி குறித்து தற்போது பேசியுள்ளார் முன் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் அவர் கூறுகையில்…

- Advertisement -

எனது வாழ்க்கையில் மறக்க முடியாத டெஸ்ட் போட்டி அதுவாகும். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மந்தமாக சென்றது. இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் 271 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி 81 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெற்றி எங்களுக்கு தன் என்று ஜாலியாக இருந்தோம்.

Sachin

திடீரென சச்சின் டெண்டுல்கர் மற்றும் நயன் மோங்கியா ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். நாங்கள் விக்கெட் விழும் என்று நினைக்கும்போதெல்லாம் நயன் மோங்கியா சிக்ஸர் அடித்து எங்களை கடுப்பு அடையச் செய்தார்.

சச்சின் டெண்டுல்கர் 136 ரன்களும் நயன் மோங்கியா 51 ரன்கள் எடுத்திருந்தனர். நயன் மோங்கியா ஒருகட்டத்தில் தனது விக்கெட்டை இழந்தார் .சச்சின் டெண்டுல்கர் இருக்கும் வரை எங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று எண்ணிக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் மனதை விட்டு விட்டோம். பிறகு 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது விக்கெட்டை இழந்தார் .அதன்பின்னர் நாங்கள் வெற்றி பெற்றோம் இந்த டெஸ்டை எங்களால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார் வக்கார் யூனிஸ்.

Advertisement