இப்படி ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் அவசியமா ? இந்த இரண்டு அணிகள் ஏன் மோதல ? – வக்கார் யூனிஸ் ஆவேசம்

Younis
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களுக்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆகாத நிலையில் அதற்கு எப்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் என்று பெயர் வைப்பீர்கள். இது அர்த்தமற்றதாக இருக்கிறது என ஐசிசிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ்.

Ind-lose

தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி விட்டால் அது எப்படி முழுமையாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளார் வக்கார் யூனிஸ்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகநிபுணர்கள் ளுக்கு ஒரு நிலையற்ற போக்கு உள்ளது. இரண்டு அரசுகளும் இவ்வாறு யோசிக்கும்போது, ஐசிசி இதில் தலையிட்டு சிறப்பான முடிவுகளை கொண்டுவரலாம். பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரு டெஸ்ட் தொடரில் ஆடினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இன்னும் முழுமையானதாக மாறும் என்று கூறியுள்ளார்.

Ind-1

இதில் கண்டிப்பாக ஐசிசி தலையிட்டு ஏதாவது செய்ய வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் மோதாத போது அது எப்படி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் வக்கார் யூனிஸ்.

- Advertisement -

தற்போது வரை இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னிலையில் உள்ளது. அதன்படி இந்திய அணி இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று தெரிகிறது. மேலும் இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளின் அட்டவணையில் இருக்கும் குறைகளை அடுத்த தொடரில் சரிசெய்யவும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Ind

மேலும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் போட்டிகளின் எண்ணிக்கை குறித்து ஏற்கனவே நிபுணர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி போட்டிகளின் புள்ளிகள் குறித்த கேள்வியும் அவ்வப்போது எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement