நான் பந்துவீச பயப்படும் பேட்ஸ்மேன் என்றால் அது இவர்தான் – பாக் வீரர் வஹாப் ரியாஸ் ஓபனடாக்

Riaz
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த வஹாப் ரியாஸ் தற்போது தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடாமல் இருந்தாலும் உலகெங்கிலும் நடைபெறும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். 36 வயதான வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள், 91 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 230 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றியுள்ள இவர் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறார்.

wahab riaz

- Advertisement -

இந்நிலையில் இந்த லங்கா பிரீமியர் தொடரின் இடையே இவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் தற்போதைய கிரிக்கெட் உலகின் டாப் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வகாப் ரியாஸ் கூறுகையில் : தற்போதைய கிரிக்கெட்டில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். அதில் குறிப்பாக சில வேகப்பந்து வீச்சாளர்கள் கிரிக்கெட் உலகையே ஆட்சி செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

அதில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஷாஹீன் அப்ரிடி, ஹஸன் அலி, ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மிட்சல் ஸ்டார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்கள் அனைவருமே நல்ல வேகத்துடன் பந்து வீசுவது மட்டுமின்றி யார்க்கர், ஸ்லோ பால், ஷார்ட் பால் என்று ஐடியா பந்துகளை அதிகமாக வீசுகிறார்கள். அதுமட்டுமின்றி முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுக்கும் திறனும் அவர்களிடம் உள்ளதால் அவர்களே மிகச் சிறந்த பவுலர்களாக பார்ப்பதாக குறிப்பிட்டார்.

abd1

அதனைத் தொடர்ந்து சிறப்பான பேட்ஸ்மேன்கள் குறித்து பேசிய வகாப் ரியாஸ் : ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் ஆகியோர்களை சிறந்த பேட்ஸ்மென் என்று குறிப்பிட்டாலும் தான் பந்துவீச பயப்படும் ஒரு பேட்ஸ்மென் குறித்து பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா, பாபர் அசாம் போன்ற வீரர்கள் சிறப்பான பேட்ஸ்மேன்கள் தான் அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடினம் தான் என்றாலும் நாம் சுதாரித்து விடலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் பந்துவீச பயப்படும் ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது ஏபி டிவிலியர்ஸ் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கே அவங்க கூப்பிட்டு சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியும் – கேப்டன் பதவி நீக்கம் குறித்து பேசிய கோலி

ஏனெனில் எப்போதும் நான் அடுத்தடுத்து எவ்வித பந்துகளை வீசப்போகிறேன் என்பதை அவர் முன்கூட்டியே கணித்து விடுவார். பவுலரின் மனதை அறியும் திறன் அவரிடம் உள்ளது. இதன் காரணமாக நான் எப்போதெல்லாம் அவருக்கு எதிராக பந்துவீசி இருக்கிறேனோ அப்போதெல்லாம் என்னை எதிர்த்து அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார் என்று வஹாப் ரியாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement