சர்ச்சைக்குள்ளான ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட் – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன ? – நடந்தது என்ன ?

Jadeja
- Advertisement -

ஐசிசி நடத்திய முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருக்கும் நியூசிலாந்து அணியை, அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பலர், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் வீரரான ரவீந்திர ஜடேஜா அவுட்டான பந்து நோபால் என்றும் மூன்றாவது நடுவர் அதை சரியாக கவனிக்க தவறிவிட்டார் என்றும் கடுமையான விமர்ச்சனங்களை சமூக வலைத்தளங்களில் வைத்து வருகின்றனர்.

jadeja 2

- Advertisement -

இந்த போட்டியின் கடைசி நாளில் இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களான விராட் கோஹ்லி, புஜாரா, ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறிய சமயத்தில், ரிஷப் பன்ட்டுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரவீந்திர ஜடேஜா. நன்றாக ஆடிக் கொண்டிருந்த அவரின் விக்கெட்டை எடுத்தார் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான நீல் வாக்னர். ஜடேஜா அவுட்டான பந்தில், நீல் வாக்னரின் பின்னங்கால் ரிட்டர்ன் கிரீஸ் எனப்படும் பக்கவாட்டு கோட்டை தொட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள், கிரிக்கெட் விதிமுறையின்படி இது நோபால் என்றும், இதை மூன்றாவது நடுவர் கவனிக்க தவறிவிட்டார் என்றும் குற்றச் சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

ஜடேஜா அவுட்டான பந்து நோபாலா இல்லையா என்பதையும், விதிமுறைகள் என்ன சொல்கிறது என்பதையும் நாங்கள் இங்கே தெரிவித்துள்ளோம். மெரில்போன் கிரிக்கெட் என்ற தனியார் கிரிக்கெட் கிளப்பின் விதிமுறைகளைதான், ஐசிசி தனது விதிமுறையாகவும் பயன்படுத்தி வருகிறது. அதனுடைய சட்டம் 21.5.1-இன் படி, ஒரு பவுலர் தன்னுடைய காலடியை முதலில் எங்கு வைக்கிறாரோ அந்த இடம் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதற்குப் பிறகு பாதம் நகர்ந்து சென்றாலும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

jadeja 1

நீல் வாக்னர் வீசிய அந்த பந்தை ஆராய்ந்த மூன்றாவது நடுவர் இரண்டு முறை அதை சரிபார்த்து உள்ளார். ஒரு பக்க கேமராவில் அவருடைய பாதமானது கோட்டைத் தொட்டிருந்தாலும், மற்றொரு பக்க கேமராவில் அவர் தனது பாதத்தை முதலில் கோட்டிற்குள் வைத்திருப்பதும், அதற்பு பிறகுதான் நகர்ந்து சென்று கோட்டை தொட்டிருப்பதும் நன்றாக தெரிந்தது. எனவே எம்சிசியின் விதிமுறைப்படி அது நோபால் இல்லையென்று அவர் முடிவு செய்துள்ளார்.

wagner

முதல் இன்னிங்சில் முன்னனி வீரர்கள் அனைவரும் அவுட்டான நிலையிலும் கடைசி வரை நின்று ஆடியிருந்தார் ஜடேஜா. எனவே இரண்டாவது இன்னிங்சிலும் அவருடைய பொறுப்பான ஆட்டம் கட்டாயமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்ததோடு மட்டுமல்லாமல், மேற்கொண்டு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை இந்திய அணி வீரர்களால் அமைக்க முடியாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement