இவர் உள்ள வந்ததும் நாங்க போட்டியை தோத்துட்டோம். என்னா அடி – தோல்விக்கு பிறகு இந்திய வீரரை புகழ்ந்த ஆஸி கேப்டன்

Wade
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் முன்னிலையில் இருந்தது, இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் காயம் காரணமாக விளையாடாததால் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விளையாடினார். நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

nattu 1

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரரான மேத்யூ வேட் 58 ரன்களும், ஸ்மித் 46 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர மற்ற அனைவரும் ரன்களை சற்று அதிகமாக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 52 ரன்களையும் இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். மேலும் ஆட்டமிழக்காமல் அணியை கடைசி ஓவரில் இரண்டு பெரிய சிக்சர்களை அடித்து பாண்டியா வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.இதன் மூலம் இந்திய அணி டி20 தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

nattu

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் கூறுகையில் : இந்த போட்டி சிறப்பாக இருந்தது. ஹர்திக் பாண்டியா உள்ளே வந்ததும் போட்டியை முற்றிலுமாக மாற்றி விட்டார். சிறப்பாக விளையாடி அவர் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துவிட்டார். நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சற்று ரன்களை குவித்து இருக்கவேண்டும். இது இந்தியா போன்ற அணிகளுக்கிடையே குறைவான ஸ்கோர் என்று கூறலாம் எங்களால் வெற்றி பெற முடியாமல் போனது சற்று வருத்தம்தான்.

pandya

இறுதி நேரத்தில் நாங்கள் சரியாக பந்துவீச தவறி விட்டோம். துவக்கம் சிறப்பாக இருக்கும் போது பெரிய ஸ்கோரை அடித்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த போட்டியின்போது மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. ஜாம்பா கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement