நீ ஒழுங்காக ஆடவேண்டும் இல்லையென்றால் உனது இடம் நிச்சயம் பறிபோகும். இளம்வீரரை எச்சரித்த – லக்ஷ்மண்

Laxman-1
- Advertisement -

தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதற்காக இந்திய அணி நிர்வாகம் எடுத்த முடிவுதான் இளம் விக்கெட் கீப்பர் ஆன பண்டை இந்திய அணியின் சேர்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது. டெஸ்ட் போட்டிகளில் சகா காயம் அடைந்தபோது அவருக்கு பதிலாக களமிறங்கிய பண்ட் கடந்த வருடம் சிறப்பாக ஆடினார் என்று கூறலாம். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே சதமடித்து அசத்தினார் பண்ட்.

pant six

- Advertisement -

ஆனால் அதன் பிறகு தனது சொதப்பலான ஆட்டத்தை தொடர்ந்து வந்த பண்ட் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலுமே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 22 வயதான இளம் வீரரான இவரை தொடர்ந்து இந்திய அணியில் வைத்து அவருக்கான வாய்ப்புகளை தேவையான இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அடுத்து வரும் 2022 உலகக் கோப்பை தொடரிலும் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது ஆட்டம் நாளுக்கு நாள் மோசமாகி சென்று கொண்டிருப்பதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமணன் தற்போது பண்ட் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ரிஷப் பண்ட் உண்மையில் திறமையான வீரர் தான் அவருக்கு பந்துகளை சிக்சருக்கு அடிக்கும் திறமை உள்ளது.

pant 1

ஆனால் அவர் எல்லா பந்துகளையும் ஒரே மனநிலையுடன் எதிர்கொள்வதால் அவர் தேவையற்ற பந்துகளை அடித்து அவுட் ஆகிறார். இதனால் அவர் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. எனவே அவர் சற்று தனது பொறுப்பை உணர்ந்து இனி வரும் ஆட்டங்களில் தனது சிறப்பான ஆட்டத்தை காண்பிக்க வேண்டும். ஏனெனில் அவரது இடத்தை சஞ்சு சாம்சன் நிச்சயம் தட்டிப்பறிக்க வாய்ப்புள்ளது என்று நான் கூறுவேன். ஏனெனில் சாம்சன் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

samson 2

பண்ட் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் அபாயகரமான வீரராக படுவதால் அவருக்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் அவர் சூழ்நிலையை புரிந்து சிறப்பாக செயல்பட வேண்டும் இல்லையெனில் அவர் வாய்ப்பு நிச்சயம் சாம்சனுக்கு சென்றுவிடும் என்று லட்சுமணன் கூறினார்.

Advertisement