இந்திய அணி கடைசியா ஜெயிச்ச 2 தொடரிலும் இவரே மேட்ச் வின்னர் – புகழ்ந்து தள்ளிய லக்ஷ்மனண்

Laxman-1

இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. 3-1 என்கிற கணக்கில் இந்தியா இங்கிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது. இங்கிலாந்து இந்தியாவுக்கு வந்தடைந்ததும் அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களும் , சில கிரிக்கெட் ரசிகர்களும் இங்கிலாந்து அணியே தொடரை ஜெயிக்கும் என்று ஒரு பக்கம் பேசி வந்தனர். ஆனால் இதையெல்லாம் தவிடுபொடியாகும் வகையில் இந்தியா இங்கிலாந்து அபாரமாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.

pant 2

முதல் போட்டியில் இந்தியா மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சியை கொடுத்தாலும் பின்னர் நடந்த மூன்று போட்டிகளில் மிகப்பெரிய கம்பேக்கொடுத்து. இந்தியாவுடைய இந்த மிகப்பெரிய வெற்றியை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த தொடரை ஜெயிப்பதற்கு ரோகித் சர்மா மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளார் என்று சில ஜாம்பவான் வீரர்கள் ஒருபக்கம் புகழ்பாடி வந்தாலும் ரிஷப் பந்த் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தான் இந்த தொடர் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் என்று விவிஎஸ் லக்ஷ்மன் சமீபத்தில் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய லட்சுமணன் , ரோகித் சர்மா ஓரிரு இன்னிங்சில் மட்டும் சிறப்பாக ஆடி வந்தாலும் தொடர் முழுக்க சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் என்றால் அது ரிஷப் மற்றும் சுந்தர் தான். அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் கீப்பிங் கிலும் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்.மொத்தம் ஆறு இன்னிங்சில் ஆடியுள்ள பண்ட் ஒரு அரை சதம் ஒரு 90 ஒரு சதம் என மொத்தமாக 54 ரன் ரேட் ஆவரேஜ் விகிதத்தில் 270 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்த தொடர் முழுவதும் அதிக சிக்சர்களை அடித்ததும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமான போட்டியான இறுதி போட்டியில் ஆட்டநாயகன் பட்டத்தையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

pant 1

மொத்தம் நான்கு இன்னிங்சில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் 181 ரன்களை 90 ரன் ரேட் ஆவரேஜ் விகிதத்தில் அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் உடன் ஜோடி போட்டுக்கொண்டு தனது அபாரமான பேட்டிங்கை அனைவருக்கும் காண்பித்தார். 96* ரன்களை அடித்த சுந்தர் எதிர்முனையில் பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டுகளை விட சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். அவரது அந்த இன்னிங்சை அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் பண்பைப் பற்றிப் பேசிய லட்சுமணன் அவரிடம் எந்த பயமும் தெரிவதாக இல்லை. எப்படிப்பட்ட இக்கட்டான நிலையாக இருந்தாலும் கூலாக வந்து தனது அதிரடி இன்னிங்சை காட்டி வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் ஆடுவது வித்தியாசமாக இருக்கிறது குறிப்பாக இந்த தொடரில் கடைசி போட்டியில் ஜிம்மி ஆண்டர்சன் வீசிய ஓவரில் லாவகமாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஒரு பவுண்டரி அடித்தார். அதை ஆண்டர்சன் மறக்கவே மாட்டார். நிச்சயமாக இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக ரிஷப் பண்ட் திகழ்வார் அதில் சந்தேகமே இல்லை என்று விவிஎஸ் லட்சுமணன் இறுதியாக கூறி முடித்தார்.