விராட் கோலியின் வெற்றியின் ரகசியம் இதுதான்: விவிஎஸ் லட்சுமணன் ஓபன் டாக்

Laxman-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். துவக்க வீரர்களாக களமிறங்கிய இருவரில் பிரித்திவ் ஷா சீக்கிரத்தில் தனது விக்கெட்டை இழந்து விட்டார்.

Shaw

- Advertisement -

அதன்பிறகு பேட்டிங் பிடிக்க வந்த விராட் கோலி களத்தில் இருந்த இளம் வீரரான மயங்க் அகர்வாலிடம் சென்று நேரடியாக ஆடுகளத்தின் தன்மை குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். இது குறித்து விவாதிக்கவும் செய்தார். இது ஒரு அற்புதமான வீரருக்கு எடுத்துக்காட்டாகும். இதுகுறித்து முன்னாள் வீரரான வி.வி.எஸ் லஷ்மண் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : விராட் கோலி உலகின் பல பகுதிகளிலும் கிரிக்கெட் விளையாடி உள்ளார். இந்த ஆடுகளத்தில் தன்மை குறித்து அவருக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் இளம்வீரரை ஊக்குவிக்க அவரிடம் ஆலோசனை கேட்கிறார் விராட் கோலி.

இதனால்தான் அவர் கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக திகழ்கிறார். இதனை கோலி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், கிரிக்கெட் மீது அவர் கொண்ட மரியாதை அதை இதனை செய்ய வைக்கிறது. இப்படியான மரியாதை வைத்திருந்தால் மட்டுமே கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Kohli 3

மேலும் டி20 தொடரின் போது கேன் வில்லியம்சன்-உடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார், இதுவும் நல்ல வீரருக்கு எடுத்துக்காட்டாகும், இதுபோன்ற செயல்பாடுகளை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே அவரது வெற்றியின் ரகசியம் என்று கூறினார் விவிஎஸ் லட்சுமணன்.

Advertisement