கோலி செய்த இந்த தவறால் தான் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது – வி.வி.எஸ் லக்ஷ்மன் குற்றசாட்டு

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியில் நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 336 ரன்கள் என்ற பெரிய ரன் குவிப்பை வழங்கியும் இங்கிலாந்து அணி வீரர்கள் 43.3 ஓவர்களில் அதிரடியாக விளையாடி சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்களான ஜானி பேர்ஸ்டோ 124 ரன்களையும், ஸ்டோக்ஸ் 99 ரன்களை விளாசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் செயல்பாடு மோசமாக இருந்தது. அதிலும் குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி விக்கெட் இழப்பின்றி 84 ரன்களையும், க்ருனால் பாண்டியா 6 ஓவர்கள் வீசி விக்கெட் இழப்பின்றி 72 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு தோல்விக்கு காரணமாக அமைந்த நிலையில் கோலியின் கேப்டன்சி குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான விவெஸ் லட்சுமணன் தனது காட்டமான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி கொண்டிருக்கும்போது பிரசித் இறுதிநேரத்தில் சிறப்பாக சமாளித்து விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அழுத்தத்தைக் கொடுத்து இருக்க வேண்டும். க்ருனால் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றியை எளிதாக்கி விட்டனர்.

Kuldeep

மேலும் கோலி அவர்கள் மோசமாக வீசியும் தொடர்ந்து ஓவர்களை வழங்கிக் கொண்டே இருந்தார். கோலி இப்படி செய்தது தவறு. க்ருனால் பாண்டியா மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் ரன்களை அதிகளவில் வழங்கியபோது அவர்களுக்கு தொடர்ந்து ஓவரை கொடுத்திருக்கக் கூடாது. ஹர்திக் பாண்டியாவை பந்துவீச அழைத்திருக்க வேண்டும். ஏனெனில் அணியில் ஆறாவது பவுலர் இருக்கும்போது அவரை பந்துவீச பந்துவீச வைக்க வேண்டும். அப்படி ஹர்டிக் பண்டியா பந்துவீச வந்திருந்தால் நிச்சயம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும்.

pandya

ஆனால் கோலி குல்தீப் மற்றும் க்ருனால் ஆகிய இருவரையும் தொடர்ந்து பயன்படுத்தினார். இந்தப்போட்டியில் பவுலர்கள் அனைவருமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக பந்து வீசவில்லை என்றும் ஹார்டிக் பாண்டியாவை பந்துவீச அழைக்காதது கோலி செய்த தவறு எனவும் லட்சுமணன் தனது காட்டமான கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement