இவரை ஏண்டா டீம்ல எடுக்கலனு கோலி ஃபீல் பண்ணுவாரு – வி.வி.எஸ் லக்ஷ்மனன் வெளிப்படை

Laxman
- Advertisement -

இங்கிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் சீனியர் வீரரான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அணியில் இடம் பெறாதது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

indvseng

அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அஷ்வினின் நீக்கம் அதிர்ச்சியை உண்டாக்கியது. மேலும் அஷ்வினின் இந்த நீக்கம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் நிச்சயம் 4வது டெஸ்ட் போட்டியில் அஷ்வினை எடுக்காததற்கு கோலி வருத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : அஷ்வின் ரன் வேகத்தை கட்டுப் படுத்துவதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிக நெருக்கடி கொடுக்கும் திறமை வாய்ந்த பவுலர். அவரை எடுக்காததற்காக நிச்சயம் கோலி வருத்தப்படுவார். அதுமட்டுமின்றி ஜடேஜாவை விட அஷ்வின் திறமை வாய்ந்தவர் என லட்சுமணன் வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ashwin

ஏற்கனவே இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் 413 விக்கெட்டுகள், 5 சதம் விளாசிய ஒரு அபார திறமை வாய்ந்த வீரரை இந்திய அணி ஒதுக்கி வைத்து இருப்பது அவர்கள் செய்யும் முட்டாள் தனம் என்று தனது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement