24 வயசுல இதுவே போதும் நான் ரிட்டயர்டு ஆக போறேன்னு தோனி சொன்னதும் ஆச்சரியமா இருந்துச்சி – லக்ஷ்மனன் பேட்டி

Laxman-1
- Advertisement -

தோனி இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பின்னர் 17 வருடங்கள் இந்திய அணிக்காக ஆடினார். டெஸ்ட் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2014ஆம் ஆண்டு வரை விளையாடினார். டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தியவர் தோனி. இருந்தாலும் இந்திய அணியை முதன்முதலாக டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்திற்கு அழைத்துச் சென்ற கேப்டன் இவர்தான்.

sachin 1

- Advertisement -

இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வு மிக எளிமையாக அறிவித்திருந்தார். அப்போதில் இருந்து தற்போது வரை தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அனைவரும் தோனியை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, வெளிநாட்டு வீரர் கெவின் பீட்டர்சன், ரிக்கி பாண்டிங் போன்ற பல வீரர்கள் தோனியை பற்றி பேசி வருகின்றார்.

இந்நிலையில் தோனியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விவி எஸ் லட்சுமணன் தோனி முதல் சதம் அடித்த போது என்ன கூறினார் என்பதை பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில்… தோனியுடன் விளையாடியதில் இரண்டு தருணங்களை நான் மறக்கவே மாட்டேன். முதலாவதாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக பைசலாபாத் நகரில் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார் தோனி.

Dhoni

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஓய்வு அறைக்குள் வந்த தோனி திடீரென்று, ‘நான் எனது ஓய்வினை அறிவிக்கப் போகிறேன்’ என்று மிகவும் சப்தமாக கத்தினார். நான் எம்எஸ் தோனி நான் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து விட்டேன் அவ்வளவுதான் என்று கத்தினார். இனிமேல் எனக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆட விருப்பம் இல்லை என்றும் கத்திக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட எனக்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது.

Laxman

அப்படித்தான் தோனி எப்போதும் இருப்பார். அதேபோல் அணில் கும்ப்ளேவின் கடைசி போட்டியில் திடீரென்று ஹோட்டல் அறையில் இருந்து மைதானம் வரை தோனிதான், எங்களது அணியின் பேருந்தை ஓட்டி வந்தார். இதனை பார்த்த நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போய்விட்டோம் என்று தெரிவித்துள்ளார் விவிஎஸ் லட்சுமணன்.

Advertisement