தோனியின் கடைசி போட்டி இந்த மண்ணில் இந்த மைதானத்தில் தான் நடக்கும் – வி.வி.எஸ் லட்சுமணன் உறுதி

Laxman-1

16 வருடங்கள் இந்திய அணிக்கு அமைதியாகவும் எளிமையாகவும் விளையாடிய தோனி திடீரென்று எளிமையாக தனது ஓய்வை அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஆடிய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்து, ஒரு பாடலை வைத்து ஒரு சிறிய வீடியோ தானே உருவாக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் தோனி

Dhoni

தோனி என்றாலே இந்த எளிமைக்கு பெயர் போனவர். சச்சின் டெண்டுள்கர், சௌரவ் கங்குலி, அணில் கும்ப்ளே, விரேந்தர் சேவாக் போன்ற வீரர்களை பார்க்கும் போது அவர்களுக்கு பெயர் சொல்லும்படியான ஒரு பெரிய இறுதிப் போட்டி நடத்தப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டது. ஆனால், தோனி இதிலெல்லாம் நாட்டம் இல்லாதவர்.

2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரின் போது இப்படித்தான் திடீரென முதல் போட்டி முடிந்தவுடன் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்படி அவ்வப்போது பெரிய ஒரு அலட்டல் கொடுக்காமல் வேலை செய்தவர் தோனி. இந்நிலையில் என்னதான் அவர் விரும்பவில்லை என்றாலும் அவரது ரசிகர்களுக்கும், அவர் செய்த சாதனைகளுக்காக அவரை வைத்து ஒரு இறுதிப் போட்டியை நடத்தி பிரியா விடை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர் .

Dhoni

பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் மற்றும் இன்சமாம் உல்-அக் போன்றோரும் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமணன் கூறுகையில்…

- Advertisement -

தோனி இந்திய அணியை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுவதற்கு பேரார்வமாக இருக்கிறார். இதனை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கவேண்டும். தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் வெற்றிகரமான அணியாக இருந்து வருகிறது. சென்னை அணி வெற்றி பெறுவதற்காக எந்த அளவிற்கும் இறங்கி வேலை செய்வார் தோனி .

Dhoni 1

தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடப் போகிறார் அவரது ஒவ்வொரு நகர்வையும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் உன்னிப்பாக ரசித்து பார்ப்பார்கள். மைதானத்தில் இருக்கும் மீதமுள்ள நாட்களை ரசிகர்கள் ரசித்து கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் அவர் விளையாடும் போட்டியே அவரது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன் இதனை நான் உறுதியாக கூறுவேன் என்று தெரிவித்துள்ளார் லட்சுமணன்.