தோனியின் ஓய்வு முடிவு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட – லஷ்மண்

Laxman

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் பங்கேற்கவில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் தற்போது நடந்து முடிந்த பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.

Dhoni

மேலும் தோனியை கடந்த சில தொடர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் நிராகரித்து வருகிறது. இந்நிலையில் தோனி மீண்டும் இப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் அவரின் ஓய்வு அறிவிப்பை வெளியிட கட்டாயப்படுத்துகிறார்களோ என்ற எண்ணமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணன் தோனியின் எதிர்காலம் குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : என்னைப்பொருத்தவரை பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது ஆட்டத்தை பொறுத்துதான் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் ஏனெனில் பண்ட் அல்லது சாம்சன் ஆகியோரில் ஒருவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது இந்திய அணிக்கு நல்லதாக அமையும் எனவே தோனி தனக்கான நேரம் முடிந்துவிட்டது என்று ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

Dhoni-1

அதுவும் 2020 ஐபிஎல் தொடருக்கு பின்னர் தான் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று லட்சுமணன் கூறினார். ஏற்கனவே பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி என்னை ஜனவரி மாதம் வரை எதுவும் கேட்க வேண்டாம் நானே எனது முடிவை அறிவிப்பேன் என்பது போல தோனி கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இலட்சுமணன் அளித்த பேட்டியால் தோனியிடம் தற்போது ஓய்வுக்கான யோசனை வந்துள்ளதா ? என்ற எண்ணம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -