அவர்கள் இருவரும் இல்லாத இந்த நேரத்தில் தான் புதிய ஹீரோக்கள் உருவாவார்கள் – வி.வி.எஸ் லக்ஷ்மனன்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக நாளை (டிசம்பர் 26) துவங்க உள்ள இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற மும்முரம் காட்டும் என்று தெரிகிறது.

indvsaus

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியில் கேப்டன் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோர் விலகியதன் காரணமாக தற்போது இந்திய அணி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் ரஹானே தலைமையில் மீதமுள்ள மூன்று போட்டிகளையும் எதிர்கொள்ள உள்ள இந்திய அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் அனைவரிடமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான விவிஎஸ் லக்ஷ்மனன் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு சப்போர்ட் செய்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது ஆக்ஷன் ரீபிளே பார்ப்பதை போல இருந்தது. இருப்பினும் ஒரு இன்னிங்சை வைத்து வீரர்களின் திறனை முடிவு செய்துவிட முடியாது.

இவர்கள் உலகின் பல இடங்களில் விளையாடிய அனுபவம் கொண்ட அனுபவ வீரர்கள். கோலி மற்றும் ஷமி ஆகியோர் இல்லாத நிலையில் இந்தியாவுக்காக அடுத்து மூன்று போட்டிகளில் விளையாடவுள்ள இளம் வீரர்கள் ஹீரோவாக அவதரிக்க உள்ளனர். நிச்சயம் எஞ்சிய ஆட்டங்களில் அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து ஹீரோவாக மாற இருக்கிறார்கள் என்று இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து லட்சுமணன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ind

பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் முன்னாள் வீரர்களும் இந்திய அணி மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடையும் என்று கூறியுள்ள நிலையில் லட்சுமணன் பாசிட்டிவாக பேசியுள்ளது சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

Advertisement