இவரை எப்படி டீம்ல இருந்து தூக்குனீங்க. இந்திய அணி தேர்வால் கடுப்பான வி.வி.எஸ் லக்ஷ்மனன் – விவரம் இதோ

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன் பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார். அதில் சிராஜ், ஷர்துல் தாகூர், ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு விளையாடுவதை உறுதி செய்தார். கோலி மேலும் சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா விளையாடுவார் என்று அறிவித்தார்.

INDvsENG

அவரின் இந்த முடிவு அறிவிப்பு வெளியான பின் சில நிமிடங்களிலேயே சமூகவலைதளத்தில் கோலி அஸ்வினை வெளியேற்றியது தவறு என்ற கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி இப்படி ஒரு மகத்தான வீரரை அணியில் இருந்து வெளியேற்றி விட்டு விளையாடுவது தவறான ஒரு முடிவு என்றும் தங்களது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணன் அஸ்வின் வெளியேற்றம் குறித்து தற்போது தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : அஸ்வின் நிச்சயம் பிளேயிங் லெவனில் விளையாட வேண்டிய ஒரு வீரர். இந்தியா 4 வேகப்பந்துவீச்சாளர் உடன் விளையாடினாலும் நிச்சயம் அஸ்வின் விளையாடி இருக்க வேண்டும்.

Ashwin

அஸ்வின் நல்ல ஸ்கில் உடைய பவுலர். வெளிநாட்டு மைதானங்களிலும் அவருடைய பவுலிங் திறமை மூலம் பெரிய விக்கெட்டுகளை அவர் நெருக்கடியான நேரத்தில் கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை வென்ற போது அவர் ஒரு முக்கிய வீரராக செயல்பட்டார்.

Ashwin 1

இந்த வேளையில் அவரை இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியில் இருந்து நீக்கியது முற்றிலும் தவறு. 8 ஆவது வீரராக அவர் களம் இறங்கினாலும் பேட்டிங் செய்யும் அளவிற்குத் திறமை உடையவர் என்று லக்ஷ்மணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ஜடேஜா மற்றும் தாக்கூர் ஆகியோர் ஆல்-ரவுண்டராக விளையாடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement