தோனிக்கு இடம் கிடையாது. உலகக்கோப்பை டி20 அணியை வெளியிட்ட முன்னாள் வீரர் – விவரம் இதோ

Dhoni

கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணி அந்த சோகத்திலிருந்து மீள தற்போது வரும் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய அணியின் பேட்டிங் பவுலிங் என இரண்டுமே தற்போது சிறப்பான நிலையில் உள்ளதால் இம்முறை டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்றும் பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

Kohli-1

தற்போது உள்ள டி20 அணியில் பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர்களுக்கே டி20 போட்டிகளில் முக்கியத்துவம் கொடுத்து ஆடி வருகிறார்கள். மேலும் இளம் வீரர்களுக்கே அதிக அளவு வாய்ப்பு கொடுத்தான் அவர்களுக்கே இந்திய அணியில் முன்னுரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பைக்கு சரியான பெஸ்ட் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணி முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தனது பார்வையில் இருந்து தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் தொடக்க வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.

Dhoni

இந்த அணியில் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட், பாண்டியா, குல்தீப் யாதவ், மணிஷ் பண்டே, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ் குமார் , தீபக் சாகர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். வி.வி.எஸ் லக்ஷ்மன் தேர்வு செய்த இந்த அணியில் முன்னணி வீரரான தோனி இடம் பிடிக்கவில்லை. மேலும் தவான், சாம்சன், சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருக்கு அணியில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -