ஆஸ்திரேலிய பவுலர்களை கொஞ்சம் சமாளிச்சிட்டா இவர் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பிருக்கு – லக்ஷ்மனண் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

Gill

இதையடுத்து தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக வீரர்கள் இரண்டு நாட்கள் முன்பாகவே மைதானத்திற்கு வந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

அதேபோன்று டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்த ரோகித் சர்மா தற்போது 3வது போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரோகித் சர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் :

Rohith

“ இரண்டு போட்டிகள் பின்பு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்குவது நல்லது. இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரராக இருக்கிறார். தொடக்க வீரராக பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியர்கள் வீசும் புதிய பந்தில் மட்டும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி விட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இதனால் ரோகித் சர்மா இரட்டை சதம் கூட அடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Rohith

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணி டாசை வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டி சுவாரசியமான ஒன்றாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.