உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : வெற்றி வாய்ப்பு இவங்களுக்கு தான் அதிகம் – வி.வி.எஸ் லக்ஷ்மணன் கருத்து

Laxman

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுதாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று இங்கிலாந்து வந்து அடைந்த நிலையில் தற்போது ஐந்து நாட்கள் குவாரண்டைனை துவங்கியுள்ளது. அதேவேளையில் நியூசிலாந்து அணியோ இங்கிலாந்து அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

INDvsNZ

இந்த டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு நேரடியாக நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் மோதும். இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை யார் கைப்பற்றுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த இறுதிப் போட்டி குறித்த கருத்துக்களையும், விமர்சனங்களையும் பல்வேறு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர், நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் அளித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணனும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணி இந்த இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு முன்பாகவே இங்கிலாந்து சென்று தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணியோ தற்போது தான் குவாரண்டைனை துவங்கியுள்ளது.

IND

நியூசிலாந்து அணி தற்போது முன்கூட்டியே டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருவதால் அந்த நாட்டு காலநிலையை எளிதில் பழகி கொள்ள முடியும். மேலும் வெளிநாட்டில் வெற்றி பெறும்போது காலநிலை என்பது மிகவும் முக்கியம் என தெரிவித்தார். மேலும் அது குறித்து அவர் கூறுகையில் : இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

- Advertisement -

conway 1

இந்திய அணியும் இன்னும் சில நாட்களில் பயிற்சியை துவங்க உள்ளதால் அவர்களும் விரைவாக பழகிக் கொள்வார்கள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் பின்பு இந்திய அணியின் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணியால் போராட முடியும் ஒரு வேலை இந்திய அணியும் காலநிலையை பழகிக்கொண்டால் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருக்கும் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement